விமலை இயக்கும் சசிகுமாரின் ‘வெற்றி’ இயக்குனர்!

‘மன்னார் வளைகுடா’ படத்தைத் தொடர்ந்து விமல் நடிக்கவிருக்கும் 2 புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு

செய்திகள் 1-Sep-2017 11:08 AM IST Chandru கருத்துக்கள்

வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்து வந்த விமலுக்கு, கடந்த வருடம் வெளிவந்த ‘மாப்பிள்ளை சிங்கம்’ படத்திற்குப் பிறகு வேறெந்த படமும் இதுவரை ரிலீஸாகவில்லை. இந்நிலையில் தனது சொந்த தயாரிப்பில், பூபதி பாண்டியன் இயக்கத்தில் ‘மன்னார் வளைகுடா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விமல். விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து மேலும் 2 புதிய படங்களில் தான் நடிக்கவிருப்பதை தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அறிவித்துள்ளார் நடிகர் விமல்.

சசிகுமார் நடித்து வெளிவந்த ‘வெற்றிவேல்’ படத்தை இயக்கிய வசந்தமணி இயக்கவிருக்கும் புதிய படம் அதில் ஒன்று. டி.இமான் இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். அதோடு, 2010ல் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் விமல். முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இயக்கும் இப்படத்தில் சூரி, கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள். நாயகி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

#Vimal #MannarValaiguda #Kalavani2 #Sasikumar #Vetrivel #Vasanthamani #DImman #Kalavani #MaplaSingam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலாதி அன்பை வீடியோ பாடல் - அசுரவாதம்


;