‘பிக்பாஸ்’ ஓவியாவின் சூப்பர்ஹிட் பட 2ஆம் பாகம்!

விமல், ஓவியா நடிப்பில் வெளிவந்த ‘களவாணி’ படத்தின் 2ஆம் பாகம் உருவாகவிருப்பதாக அறிவிப்பு

செய்திகள் 1-Sep-2017 10:29 AM IST Chandru கருத்துக்கள்

தமிழகத்தின் லேட்டஸ்ட் சென்சேஷனல் தேவதையான ஓவியா, மீண்டும் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் வரமாட்டாரா என அனைத்து ரசிகர்களும் ஏங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், தான் திரும்பவும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போவதில்லை, படங்களில் நடிக்கப்போகிறேன் என சமீபத்தில் வீடியோ மூலம் தெளிவுபடுத்தினார் ஓவியா. அதனைத் தொடர்ந்து ஓவியா நடிப்பில் ஏற்கெனவே ‘சீனி’ என்ற பெயரில் தயாராகியிருந்த படம் ‘ஓவியா விட்டா யாரு’ என பெயர் மாற்றி ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்தனர்.

இப்போது, விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘களவாணி’ படத்தின் 2ஆம் பாகம் உருவாகவிருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்குணம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திலும் விமல் நாயகனாக நடிக்கிறார். ஓவியா இருக்கிறாரா என்பதை தெரிவிக்கவில்லை. ஆனால், முதல் பாகத்தில் காமெடியால் பெரிதும் கவரப்பட்ட கஞ்சா கருப்புடன், சூரியும் முக்கிய வேடமொன்றில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘களவாணி 2’வை இயக்கும் சற்குணம் மாதவன் நாயகனாக நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றையும் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

#Oviya #Kalavani #Sargunam #Vimal #Soori #Kalavani2 #BigBoss #KanjaKaruppu #ChandiVeeran #Nayyandi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;