‘மெர்சல்’ தமிழக வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு!

மெர்சல் படத்தை தயாரிக்கும் நிறுவனமே தமிழகம் முழுக்க வெளியிடவும் செய்கிறது!

செய்திகள் 31-Aug-2017 6:08 PM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் தீம் மியூசிக் ஒன்றும் விரைவில் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இப்படி தினம் தினம் ‘மெர்சல்’ குறித்த புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் குறித்த மற்றொரு புதிய தகவலாக ‘மெர்சல்’ படத்தை தமிழகம் முழுக்க இந்த படத்தை தயாரித்து வரும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனமே வெளியிடவிருப்பதாக அந்நிறுவனத்தினர் இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘மெர்சல்’ தீபாவளி வெளியீடாக வரவிருப்பதால் இப்படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Mersal #Vijay #Samantha #KajalAgarwal #SriThenandalFilms #Atlee #ARRahman #Murali Ramasamy, Thalapathy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வரும் ஆனா வராது வீடியோ பாடல் - சீமராஜா


;