செப்டம்பர் 29-ஆம் தேதி ஜி.வி.பிரகாஷின் ‘செம’ படம்!

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடரு’டன் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘செம’

செய்திகள் 31-Aug-2017 12:51 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’. ஜி.வி.பிரகாஷ், அறிமுகம் அர்தனா கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மன்சூரலிகான், கோவை சரளா, யோகி பாபு முதலானோரும் நடித்திருக்கிறார்கள். பாண்டிராஜின் ‘பசங்க புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் லிங்க பைரவி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜை விடுமுறையை குறி வைத்துள்ள சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு கூட்டணியின் ‘ஸ்பைடர்’ ஆகிய படங்களும் ஏற்கெனவே செப்டம்பர் 29, ரிலீஸ் தேதி குறித்துள்ள நிலையில் இப்போது பாண்டிராஜின் ‘செம’ திரைப்படமும் அந்த படங்களுடன் களமிறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த படங்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் முதலானோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ திரைப்படத்தை செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியிட முடிவு செய்து அதற்கான விளம்பரங்களை அப்பட குழுவினர் செய்து வருவதால் ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி 4 திரைப் படங்கள் வெளியாகும் வாய்ப்பு ஏற்படுள்ளது.

#Pandiraj #Sema #Vallikanth #GVPrakash #Arthana #KovaiSarala #MansoorAliKhan #YogiBabu #Jai #Anjali #Baloon

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வம் தாள மயம் டீஸர்


;