’மெர்சல்’ தீம் மியூசிக், டிரைலர் எப்போது ரிலீஸ்?

‘மெர்சல்’ படத்தின் தீம் மியூசிக், டிரைலர் குறித்து தேனாண்டாள் நிறுவனத்தின் ஹேமா ருக்மிணி புதிய தகவல்

செய்திகள் 31-Aug-2017 12:43 PM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘மெர்சல்’ படத்தின் ஆல்பத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக வெளியிட்டனர். பாடல்களும் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளபோதும், அந்த ஆல்பத்தில் மொத்தமே 4 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பது ‘தளபதி’ ரசிகர்களுக்கு சற்று வருத்தமாகி உள்ளது. இந்நிலையில், அவர்களை குஷிப்படுத்தும் வகையில், தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஹேமா ருக்மிணி. ஏற்கெனவே வெளிவந்துள்ள 4 பாடல்களோடு புதிதாக தீம் மியூசிக் ஒன்றும் விரைவில் வெளிவரவிருப்பதாக அறிவித்துள்ளார். அதோடு, ‘மெர்சல்’ டீஸர், டிரைலரும் வரவிருக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளார்.

ஆடியோ வெளியீட்டு தினத்திலேயே ‘மெர்சல்’ டீஸரையும் வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால், சில காரணங்களால் அதை தள்ளிப்போட்டனர். டீஸர் ஏற்கெனவே ரெடியாகி இருப்பதால், அடுத்த வாரத்தில் அதை ரிலீஸ் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது ‘மெர்சல்’ படக்குழு.

#Mersal #Vijay #Samantha #KajalAgarwal #SriThenandalFilms #Atlee #ARRahman #Murali Ramasamy, Thalapathy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வரும் ஆனா வராது வீடியோ பாடல் - சீமராஜா


;