அமீர் பட டைட்டிலில் எம்,ஜி.ஆர், ரஜினி ‘டச்’!

ஆதம்பா இயக்கத்தில் உருவாகும் ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் அமீர்!

செய்திகள் 29-Aug-2017 1:17 PM IST Chandru கருத்துக்கள்

பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், எம்.ஜி.ஆர். பெயரையும், ரஜினியின் ‘பாண்டியன்’ திரைப்பட பெயரையும் இணைத்து, ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’ என்று புதிய படமொன்றிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆதம்பாவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் இயக்குனர் அமீர் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை தயாரித்து, இயக்கும் ஆதம்பாவா கூறியது....

‘‘இத்திரைப்படம் அமைதிப்படைக்குப்பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம்.ஜி.ஆர். ரசிகனை இப்படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது!’’ என்றார்.

அமீருடன் நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மற்றும் மகதி சங்கர், ராஜ் கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத் ராம், பாவா லக்ஷ்மணன், வின்சென்ட் ராய், செவ்வாழை, சுஜாதா, ஜீவிதா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய வைரமுத்து, பா.விஜய் பாடல்கள் எழுத வித்யாசாகர் இசையமைக்கிறார்.

ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அமீர் ‘வட சென்னை’ மற்றும் ‘சந்தனத்தேவன்’ படத்திலும் பிசியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் ஆதம்பா தெரிவித்துள்ளார். தேனி, மதுரை பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

#MGRPandian #Ameer #Aadhamba #AnandRaj #Ponvannan #KanjaKaruppu #VidyaSagar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;