ஹன்சிகா நடித்த கேரக்டரில் ‘மெட்ராஸ்’ கேத்ரின் தெரஸா!

‘போகன்’ தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜாவுக்கு ஜோடியாகிறார் கேத்ரின் தெரஸா!

செய்திகள் 29-Aug-2017 10:43 AM IST VRC கருத்துக்கள்

‘தனி ஒருவன்’ படத்தின் பெரிய வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவி, அர்விந்த் சாமி கூட்டணியில் வெளிவந்தது ‘போகன்’ படம். பேன்டஸி த்ரில்லர் படமாக வெளிவந்த இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்திருந்தார். இப்படம் இப்போது தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. ‘போகன்’ ஜெயம் ரவி கேரக்டரில் தெலுங்கு ஹீரோ ஜெயம் ரவி நடிக்கிறார். அர்விந்த் சாமி கேரக்டருக்காக அவரையே அணுகியபோது அவர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கில் அர்விந்த் சாமியின் கேரக்டரில் அவரே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரவிதேஜாவைத் தொடர்ந்து படத்தின் நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்த கேரக்டரில் கேத்ரின் தெரஸாவை ஒப்பந்தம் செய்திருக்கின்றனராம். ‘போகன்’ படத்தின் ரீமேக் வெர்ஷனில் அதன் இரண்டாம் பாதியை தெலுங்குக்கு ஏற்றபடி கொஞ்சம் எமோஷனலாக மாற்ற முடிவு செய்துள்ளனராம்.

#CatherineTresa #ThaniOruvan #JayamRavi #ArvindSwamy #Bogan #Hansika #RaviTeja #Lakshman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அடங்கமறு டீஸர்


;