வேதாளம் ரெக்கார்டை முறியடித்த விவேகம்!

தமிழக பாக்ஸ் ஆபிஸில் ‘கபாலி’க்குப் பிறகு பெரிய வசூல் செய்த விவேகம்

செய்திகள் 26-Aug-2017 2:33 PM IST Chandru கருத்துக்கள்

அஜித், சிவா கூட்டணியில் உருவான 3வது படமான ‘விவேகம்’ நேற்று உலகமெங்கும் 3500த்திற்கும் அதிகமான திரையரங்குளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிலிருந்த இப்படம் தமிழகத்தில் மட்டும் 850க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது. இது ரஜினியின் ‘கபாலி’ (700+) பட தியேட்டர்கள் எண்ணிக்கையைவிட அதிகம். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததாலோ என்னவோ, ‘விவேகம்’ அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் கவரத் தவறிவிட்டது. அதோடு, படத்திற்கு விமர்சனங்களும் இருவேறாக அமைந்தது.

ஆனால், நெகடிவ் விமர்னசங்களையும் தாண்டி, படம் எதிர்பார்த்ததைவிட பெரிய வசூல் செய்திருப்பதாக டிரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ‘வேதாளம்’ படத்தின் முதல் நாள் வசூலை ‘விவேகம்’ முறியடித்திருக்கிறதாம். வேதாளம் படம் முதல் நாளில் 15.5 கோடி வசூல் செய்ததாம். விவேகம் முதல் நாளில் மட்டுமே 17 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அளவில் ‘கபாலி’ முதல் நாளில் 21 கோடி வசூல் செய்தது. அந்தவகையில், விவேகம் 2வது பெரிய வசூல் செய்த படமாகிறது.

முதல் நாளில் 17 கோடியும், இரண்டாம் நாளில் 12 கோடியும் ஆக மொத்தம் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 29 கோடி வசூலை அஜித்தின் ‘விவேகம்’ படம் செய்திருப்பதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#AjithKumar #Vivegam #KajalAggarwal #AksharaHaasan #VivekOberoi #SathyaJyothiFilms #Anirudh #Siva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;