இயக்குனர் ராஜேஷ் - சந்தானத்தின் ‘மெர்சல்’ கூட்டணி!

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சந்தானம்!

செய்திகள் 25-Aug-2017 9:49 AM IST Chandru கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த 6 படங்களில் 5 படங்களில் நாயகனுக்கு இணையான காமெடி ரோலில் கலக்கியவர் நடிகர் சந்தானம். குறிப்பாக ராஜேஷின் ஆரம்ப கால படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய மூன்று படங்களின் வெற்றியில் சந்தானத்தின் பங்கு மிகப்பெரியது. சந்தானத்தின் கேரியரை வளர்த்துக் கொள்ளவும் அப்படங்கள் உறுதுணையாக இருந்தததையும் மறுப்பதற்கில்லை.

இந்நிலையில், எம்.ராஜேஷ் அடுத்து இயக்கவிருக்கும் படம் ஒன்றில் சந்தானம் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை ‘மெர்சல்’ தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிக, நடிகையர், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க தற்போது சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம், சக்கப்போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் அடுத்தடுத்த ரிலீஸுக்காக தயாராகி வருகின்றன. இதில் முதல் படமாக செப்டம்பர் 8ஆம் தேதி சர்வர் சுந்தரம் திரைப்படம் வெளியாக உள்ளது.


#Santhanam #Rajesh #SriThenandalFilms #ServerSundaram #SakkaPoduPoduRaja, #MannavanVanthanadi #OKOK #SMS

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர்


;