‘கபாலி’யின் முதல் நாள் கலெக்ஷனை முறியடிக்குமா ‘விவேகம்’?

முதல் நாள் கலெக்ஷனில் புதிய சாதனை படைக்குமா ‘விவேகம்’

செய்திகள் 24-Aug-2017 1:15 PM IST RM கருத்துக்கள்

சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ள ‘விவேகம்’ படம் இன்று உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்ததால், தமிழகமெங்கும் இப்படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சிகளும் திரையிடப்பட்டன. அதோடு டிக்கெட் விலையும் 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படம் தமிழகத்தில் வெளியான தியேட்டர்கள் எண்ணிக்கையில் ‘கபாலி’யே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அப்படம் 650க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானதாம். இப்போது அதை முறியடித்து ‘விவேகம்’ திரைப்படம் 850க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளதாக டிரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுவரை ‘விவேகம்’ படத்திற்கான இரண்டு காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில், படத்திற்கு விமர்சனங்கள் சற்று பின்னடைவாக இருந்தபோதும், முதல் நான்கு நாட்களுக்கான முன்பதிவுகள் 95% மேல் முடிவடைந்துவிட்டது. இதனால் தமிழக பாக்ஸ் ஆபிஸில் ‘விவேகம்’ திரைப்படம் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் கலெக்ஷனைப் பொறுத்தவரை ‘கபாலி’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தததாக கூறப்படுகிறது. இப்போது ‘விவேகம்’ அதைவிட அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸாகியிருப்பதால், கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கபாலி’யின் முதல் நாள் சாதனை வசூலை விவேகம் முறியடிக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.

#Vivegam #Kabali #Ajith #Rajinikanth #Siva #Anirudh #Ranjith #SathyaJothiFilms #VivekOberai #SanthoshNarayanan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja


;