‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தற்போது இயக்கி வரும் படம் ‘இரவாக்காலம்’. எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா காபி முதலானோர் நடிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இயக்குனர் அஸ்வின் சரவணன், எஸ்.ஜே.சூர்யா உட்பட ‘இரவாக்காலம்’ படக்குழுவினர் ஊட்டி சென்றுள்ளனர். அங்கு இரவாக்காலம் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 42 நாட்கள் நடைபெறவிருக்கிறது. இந்தப் படப்பிடிப்புடன் அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்துவிட்டு அக்டோபர் 7-ஆம் தேதி படக்குழுவினர் சென்னை திரும்பவிருக்கிறனர். ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘மாயா’ படத்திற்கு இசை அமைத்த ரான் ஏதன் யோஹான் இசை அமைக்கிறார்.
#Iravaakaalam #SJSuriya #Ashwin #SriThenandalFilms #SshivadaNair #WamiqaGabbi #RonEthanYohan #Maya
தமிழகத்தில் சமீபத்தில் சில கால் டாக்ஸி ஓட்டுனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களை...
‘தர்மபிரபு’, ‘கூர்கா’ முதலான படங்களை தொடர்ந்து ‘யோகி’ பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மண்டேலா’....
தமிழ் சினிமாவில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது புதிதல்ல. அந்த வரிசையில் பிரபல இயக்குனரும்,...