மலைக்க வைக்கும் ‘விவேகம்’ தியேட்டர் எண்ணிக்கை!

அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம் உலகமெங்கும் 3500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறதாம்

செய்திகள் 23-Aug-2017 10:59 AM IST Chandru கருத்துக்கள்

அஜித், சிவா கூட்டணியில் உருவாகி நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ‘விவேகம்’ படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் கிட்டத்தட்ட விற்றுத்தீர்ந்துவிட்டன. படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருப்பதால், இதுவரை எந்தத் தமிழ்ப்படத்திற்கும் இல்லா அளவுக்கு ‘விவேகம்’ படத்திற்கு தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக டிரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரை வெளியான படங்களில் ரஜினியின் ‘கபாலி’தான் மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸானது. அந்த சாதனையை தற்போது அஜித்தின் ‘விவேகம்’ முறியடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ‘கபாலி’ கிட்டத்தட்ட 700 திரையரங்குகளில் வெளியானது. ஆனால், ‘விவேகம்’ படத்திற்கு 850க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கேரளாவில் 300 திரையரங்குகளிலும், ஆந்திரா தெலுங்கானாவில் 450க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் 300க்கும் அதிகமான திரையரங்குகளிலும் ‘விவேகம்’ திரைப்படம் வெளியாகிறதாம்.

மலேசியாவில் மொத்தம் 112 இடங்களில் 700க்கும் அதிகமான ஸ்கிரீன்களில் ‘விவேகம்’ திரைப்படம் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் மட்டுமே 1500க்கும் அதிகமான தியேட்டர்களில் ‘விவேகம்’ திரைப்படம் வெளியாகிறதாம். ஒட்டுமொத்தமாக உலகளவில் ‘விவேகம்’ திரைப்படம் 3500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாகத் தெரிகிறது.

#Vivegam #Ajith #KajalAgarwal #AksharaHaasan #Siva #Anirudh #Kabali #Rajinikanth #Mersal #Vijay #Thala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குத்தூசி - ட்ரைலர்


;