2013ல் அஜித்துடன், 2017ல் விஜய்யுடன் : சுசீந்திரனின் வெற்றிக் கணக்கு!

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் நடிக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகவிருப்பதாக அறிவிப்பு

செய்திகள் 23-Aug-2017 10:18 AM IST Chandru கருத்துக்கள்

‘அறம் செய்து பழகு’ என்ற பெயரில் உருவாகிவந்த சுசீந்திரனின் திரைப்படம் சமீபத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‘மாநகரம்’ புகழ் சந்தீப் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் விக்ராந்த், சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து, ‘மெர்சல்’ விஜய்யுடன் சுசீந்திரன் மோதுகிறார் என்ற ரீதியில் பலரும் செய்தி வெளியிட்டனர்.

இதற்கு விளக்கமளித்து இயக்குனர் சுசீந்திரன் தற்போது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘எங்களுடைய நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா? என்று கேட்கிறார்கள். மெர்சலை எதிர்த்து வரவில்லை, மெர்சலுடன் வருகிறோம். 2013ல் பாண்டியநாடு திரைப்படத்தை அஜித் சாரின் ‘ஆரம்பம்’ படத்துடன் வெளியிட்டோம். ஆரம்பம் படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது... நன்றி!’’ என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

வரும் தீபாவளிக்கு விஜய்யின் ‘மெர்சல்’, சந்தீப்பின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, கௌதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மஹாதேவகி’, அர்ஜுனின் ‘சொல்லிவிடவா’ ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#Suseenthiran #NenjilThunivirundhal #SundeepKishan #Vijay #Mersal #Pandiyanaadu #Ajith #Arrambam #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜுங்கா ட்ரைலர்


;