மெகா ஸ்டாரின் மெகா கூட்டணி!

சிரஞ்சீவியின் 151-வது படமான ‘சாயே ரா நரசிம்மரெட்டி’யில்  இணையும் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்சேதுபதி, நயன்தாரா!

செய்திகள் 22-Aug-2017 2:59 PM IST VRC கருத்துக்கள்

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிறந்த நாள் இன்று! அவருடைய பிறந்த நாளையொட்டி அவர் நடிக்கவிருக்கும் 151-வது படத்தின் டைட்டில் மற்றும் இப்படத்தில் பங்கேற்கவிருப்பவர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘சாயே ரா நரசிம்மரெட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் சரித்திர கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா, நாசர், ரவி கிஷன், முகேஷ் ரிஷி, ரகுபாபு, பர்சூரி வெங்கடேஸ்வரராவ், சுப்பராஜ், ஜெயபிரகாஷ் என மிகப் பெரிய கலைஞர்கள் நடிக்கவிருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் சிரஞ்சீவி மற்றும் விஜய்சேதுபதி ஆகியோருடன் முதன் முதலாக கை கோர்க்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். புரொடக்‌ஷன் டிசைனராக ராஜீவன் பணியாற்றுகிறார். இந்த படம் தெலுங்கு தவிர மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

#Chiranjeevi #Nayanthara #VijaySethupathi #RamCharanTeja #SurendarReddy #ARRahman #JagapathiBabu #Sudeep #AmithabBachchan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;