‘ஜோக்கர்’ சோமசுந்தரத்துடன் இணையும் சாந்தினி!

’ஜோக்கர்’ சோமசுந்தரத்துடன் கதாநாயகியாக நடிக்கும் சாந்தினி தமிழரசன்!

செய்திகள் 22-Aug-2017 12:03 PM IST VRC கருத்துக்கள்

‘சித்து +2’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இந்த படத்தை தொடர்ந்து ‘நைய்யப்புடை’, ‘வில் அம்பு’ உட்பட பல படங்களில் நடித்த சாந்தினி தமிழரசன் தற்போது அரவிந்த் சாமியுடன் ‘வணங்காமுடி’ சிரிஷுடன் ‘ராஜா ரங்குஸ்கி’, ஆர்.கே.சுரேஷுடன் ‘பில்லா பாண்டி’ முதலான படங்களில் நடித்து வருவதோடு, ‘ஜோக்கர்’ படப் புகழ் சோமசுந்தரம் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். அமெரிக்காவில் இயக்குனர் பயிற்சி பெற்று வந்துள்ள மனோஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. க்ரைம் த்ரில்லர் ரக படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 5-ஆம் தேதி வரை பாண்டிச்சேரியில் தொடர்ந்து நடக்கவிருக்கிறது.

#ChandiniTamilarasan #Chandini #Joker #SomaSundaram #BillaPandi #naiyaapudai #RajaRanguski

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணனின் லீலை வீடியோ பாடல் - வஞ்சகர் உலகம்


;