வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வந்த 8 பெண்களுக்கு நடிகை ரோகிணி விருதுகள் வழங்கினார்!

தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு நடிகை ரோகிணி விருதுகள் வழங்கினார்

செய்திகள் 21-Aug-2017 1:51 PM IST VRC கருத்துக்கள்

பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் உடல் எடை குறைப்பு மையமான சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ‘காஸ்மோ க்ளிட்ஸ்’ விருதுகள் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தீ காயங்களால் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ‘பீனிக்ஸ் க்ளிட்ஸ்’ விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விருதுகளை நடிகையும், இயக்குனருமான ரோகிணி வழங்கினார்.

பிரியதர்சினி, அஸ்மா, மாரியம்மாள், தமிழ் செல்வி, பரிமளா, புனிதவள்ளி, சத்யா, கோமளா ஆகிய 8 பெண்களும் முறையான பயிற்சி பெற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள் ‘ரைட்டர்ஸ் கஃபே’யில் பணிபுரிந்து வருகிறார்கள். தங்கள் முகத்தில் ஏற்பட்ட தீ காயத்தால் பலரால் புறக்கணிக்கப்பட்ட இவர்கள் அனைத்து தடைகளையும் எதிர்த்து போராடி தற்போது சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனையின் நிறுவனர் கார்த்திக் ராம் பேசும்போது, ‘‘எங்கள் மருத்துவமனை உடல் எடை பருமன், முடி உதிர்தல், பெண்கள் உடலில் திடீர் மாற்றம் போன்றவற்றுக்கு சிறப்பான முறையில் தீர்வு கண்டு வருகிறது. இந்த ஆண்டு தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதைப் போல அடுத்த ஆண்டு திருநங்கைகளுக்கு உதவும் விதமாக விருதுகள் வழங்க இருக்கிறோம். அவர்கள் பிரச்சனைகள் தீர்ப்பதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

#BurnSurvivors #CosmoglitzAwards #Rohini

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

54321 - டிரைலர்


;