அரவிந்த்சாமியுடன் கேமியோ கேரக்டரில் நடிக்கும் ‘புலி’ ஹீரோயின்!

அரவிந்த் சாமி, அமலாபால் நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கலி’ல் இணையும் நிகிஷா பட்டேல்!

செய்திகள் 21-Aug-2017 1:10 PM IST VRC கருத்துக்கள்

சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்து வரும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல். மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகிய மலையாள படமான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகி வரும் இப்படத்தில் மம்முடி நடித்த கேரக்டரில் அரவிந்த்சாமியும், நயன்தாரா நடித்த கேரக்டரில் அமலாபாலும் நடிக்க, இப்படத்தில் ஒரு கேமியோ கேரக்டரும் இடம் பெறுகிறது. மலையாளத்தில் இந்த கேமியோ கேரக்டரில் இஷா தல்வார் நடித்திருந்தார். தமிழில் அந்த கேரக்டரில் நிகிஷா பட்டேல் நடிக்கிறார். இது குறித்து நிகிஷா பட்டேல் குறிப்பிடும்போது, ‘‘அரவிந்த்சாமியுடன் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம்! எனது முதல் பட ஹீரோ பவன் கல்யாண் மாதிரி அரவிந்த்சாமியும் மிகவும் எளிமையான, இனிமையான மனிதராக இருக்கிறார்’’ என்று கூறியுள்ளார். நிகிஷா கதாநாயகியாக நடித்த முதல் படம் ‘கொமரம் புலி’ என்ற தெலுங்கு படம்! இதில் பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார்.

#ArvindSwamy #Mammootty #AmalaPaul #Nayantara #IshaTalwar #NikeshaPatel #Siddique #KomaramPuli #PawanKalyan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;