‘‘மெர்சல்’னா மிரட்டலா இருக்கணும்’’ - விஜய்

’எதிரிகள் இல்லாத வாழ்க்கை போரடிக்கும்!’ – மெர்சல் விழாவில் விஜய்

செய்திகள் 21-Aug-2017 10:36 AM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (20-8-17) மாலை சென்னையில் நடைபெற்றது. விஜய் நடிக்க வந்து 25-வது வருடம், ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு வந்து 25 வருடம், ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் 100-ஆவது படம் ‘மெர்சல்’ போன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இவ்விழாவில் விஜய் பேசும்போது,

‘‘சில விஷயங்களை இங்கு பேசியாக வேண்டும். நான் அறிவுரை கூறும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை. நான் வெளியூர் செல்லும்போது ரசிகர்களையும், நண்பர்களையும் சந்திப்பேன். அப்போது என்னை சுற்றிக்கொண்டிருக்கும் சில நெகட்டிவ் விஷயங்கள் குறித்து சொல்வார்கள். எதிர்மறை விஷயங்களையும், விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். நமது வேலையை மட்டும் ஒழுங்காக செய்தால் போதும். தேவையில்லாத விஷயங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இந்த உலகத்தில் யாரும் நம்மை அவ்வளவு ஈசியாக வாழ விட மாட்டார்கள்! எல்லா தடைகளையும், சோதனைகளையும் கடந்து தான் வாழ வேண்டும். எதிர்கள் இல்லாத வாழ்க்கை போரடித்து விடும். எல்லோருக்கும் நம்மை பிடிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. சில பேருக்காவது நம்மை பிடிக்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் ஜாலியாக இருக்க முடியும். என் படங்களுக்கு ஹிட், ஃப்ளாப், ப்ளாக் பஸ்டர் எல்லாம் கொடுத்திருக்கிறீர்கள்! அதைவிட உங்களைப் போன்ற ரசிகர்களை சம்பாதித்தது தான் மிகப் பெரிய விஷயம்.

ஒரு சின்ன கதையை சொல்கிறேன். இதய அறுவை சிகிச்சை டாக்டர் காரை சர்வீஸ் செய்வதற்காக மெக்கானிக்கிடம் கொடுத்தார். அந்த மெக்கானிக் உங்களை மாதிரிதான் நான் வால்வை பொருத்துகிறேன். அடைப்புகளை சரி செய்கிறேன். ஆனால் எனக்கு கிடைக்காத பெயரும், புகழும், பணமும் உங்களுக்கு மட்டும் கிடைக்கிறதே என்று கேட்டார். அதற்கு டாக்டர், ‘‘நீ சொல்வது சரிதான். அதையெல்லாம் வண்டி ஓடிக்கொண்டே இருக்கும்போது செய்து பார் புரியம்’’ என்றார்.

நான் பேசுவது, செய்வது எல்லாம் பயனுள்ளதாக இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். ‘‘துப்பாக்கி’னா தோட்டா இருக்கணும், ‘கத்தி’னா ஷார்ப்பா இருக்கணும். ‘தெறி’ன்னா தெனாவட்டா இருக்கணும், ‘மெர்சல்’னா மிரட்டலா இருக்கணும்’’ என்று கூறியவாறு தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

#Vijay #Mersal #Samantha #KajalAgarwal #Atlee #ARRahman #SriThenandalFilms #NithyaMenen #Parthipan #Dhanush

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜுங்கா ட்ரைலர்


;