இரண்டு நாட்களில் ‘விவேகம்’ செய்த சாதனை!

48 மணி நேரத்தில் ‘விவேகம்’ டிரைலருக்கு 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல் கிடைத்து சாதனை!

செய்திகள் 19-Aug-2017 4:47 PM IST VRC கருத்துக்கள்

அஜித், சிவா மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள ‘விவேகம்’ வருகிற 24-ஆம் தேதி உலகம் முழுக்க அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் வெளியானது. இந்த டிரைலர் வெளியான முதல் நாளிலேயே 50 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையிடல்கள் கிடைத்து சாதனை புரிந்தது. இப்போது இரண்டு நாட்கள் (48 மணிநேரம்) கணக்குபடி ‘விவேகம்’ டிரைலருகு 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்கள் கிடைத்து தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத சாதனையை புரிந்துள்ளது. இந்த டிரைலர் இன்னும் பல சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக ’லைக்’குகள் பெற்ற டிரைலரும் ‘விவேகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

#Vivegam #Ajith #KajalAgarwal #VivekOberai #SathyaJothiFilms #Anirudh #Siva #AksharaHaasan #Karunakaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;