மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடரு’க்காக சென்னையில் பிரம்மாண்ட விழா!

பிரம்மாண்ட விழாவில் வெளியாகவிருக்கும் மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படப் பாடல்கள்!

செய்திகள் 19-Aug-2017 11:53 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல்ப்ரீத் சிங் நடிக்கும் ’ஸ்பைடர்’ படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள இப்படத்தின் பாடல்களையும், டிரைலரையும் மிக விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ‘ஸ்பைடர்’ படப் பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக ‘ஸ்பைடர்’ படப் பாடல்கள் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. மிகப் பிரம்மாண்டமான முறையில் அந்த விழா நடைபெறவிருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் நேரடியாக உருவாகியுள்ள இப்படத்தில் மகேஷ் பாபுவே தமிழிலும் டப்பிங் பேசியிருக்கிறார்! மகேஷ் பாபுவுடன் பரத், எஸ்.ஜே.சூர்யா முதலானோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

#SpyderAudiolaunch #Spyder #MaheshBabu #RakulPreetSingh #ARMurugadoss #SanthoshSivan #SJSuriya #Bharath

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் தமிழ் - ட்ரைலர்


;