எமோஷனலும், என்டர்டெயின்மென்டும் நிறைந்த ‘வேலைக்காரன்’ - சார்லி

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரனி’ல் எமோஷனலும், என்டர்டெயின்மென்ட்டும் கலந்த கேரக்டரில் நடிக்கும் சார்லி!

செய்திகள் 19-Aug-2017 11:31 AM IST VRC கருத்துக்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் முதலானோர் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் சார்லி சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸரில் சார்லியை பார்க்க முடியவில்லை என்றாலும் கதையில் சிவகார்த்திகேயன் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு முதுகெலும்பு மாதிரி இருந்து செயல்படும் பவர்ஃபுல்லான கேரக்டராம் சார்லிக்கு! ‘வேலைக்காரனி’ல் எமோஷன்ஸுக்கும், என்டர்டெயின்மென்டுக்கும் குறைவிருக்காது என்று கூறியுள்ள சார்லி, தன் கேரட்கர் மட்டுமல்ல, படத்திலுள்ள அனைத்து கேரக்டர்களையும் மோகன்ராஜா கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களாக வடிவமைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மாநகரம்’ படத்திலும் சார்லி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Sivakarthikeyan #Velaikkaran #MohanRaja #Maanagaram #Charlie #Sri #Nayanthara #24amstudios #RDRaja #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கல்யாண வயசு - கோலமாவு கோகிலா


;