சசிகுமாரின் ‘கொடிவீரன்’ : பிரத்யேக தகவல்கள்!

முத்தையா இயக்கும் சசிகுமாரின் ‘கொடிவீரன்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது!

செய்திகள் 18-Aug-2017 5:15 PM IST VRC கருத்துக்கள்

குட்டிபுலியை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் இரண்டாவது படமான ‘கொடிவீரன்’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வந்தது. கடந்த மே 10-ஆம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டது. இந்த படத்தில் சசிகுமாருடன் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா என 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ‘குற்றம்-23’ படத்தில் போலடான ஒரு டீச்சர் கேரக்டரில் நடித்த மகிமா நம்பியார் இந்த படத்தில் கயல் என்ற கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார் என்றும் ‘குற்றம்-23’ படத்தில் இடம் பெற்றது மாதிரி இப்படத்திலும் அவருக்கு பவர்ஃபுல்லான கேரக்டர் அமைந்துள்ளது என்ற தகவல் படக்குழுவினர் வாட்டாரத்திலிருந்து நமக்கு கிடைத்துள்ளது.
மொத்தம் 45 நாட்கள் நடந்த ‘கொடிவீரன்’ படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 40 நாட்கள் மகிமா நம்பியார் கலந்துகொண்டு நடித்துள்ளார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. முழுக்க முழுக்க மதுரை கிராமத்து பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை எஸ்.ஆர்.கதிர் கவனிக்க, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் கொடிவீரன் படத்தின் டீஸர், டிரைலர் முதலானவை மிக விரைவில் வெளியாகவிருக்கிறது

#KodiVeeran #SasiKumar #MahimaNambiyar #Muthaiyah #Komban #KuttiPuli #Marudhu #Poorna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;