தென்னிந்தியளவில் முதல்முறையாக, இந்தியளவில் 3வது முறையாக ‘மெர்சல்’

விஜய்யின் ‘மெர்சல்’ பட விளம்பர யுக்தியில் புதிய முயற்சி!

செய்திகள் 18-Aug-2017 2:55 PM IST Chandru கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படத்தின் இரண்டு சிங்கிள் டிராக் பாடல்களைத் தொடர்ந்து வரும் 20ஆம் தேதி ‘மெர்சல்’ ஆடியோ விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இப்படத்தை இந்திய அளவில் விளம்பரப்படுத்தும் நோக்கோடு புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளது ‘மெர்சல்’ படக்குழு. அதன்படி, இந்திய அளவிலான ட்விட்டரில் ‘மெர்சல்’ ஹேஷ்டேக் வார்த்தைக்கான ‘எமோஜி’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு வீரர் விஜய்யின் உருவம் அந்த எமோஜியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த ‘எமோஜி’ டெக்னாலஜியை டிவிட்டர் இந்தியாவுடன் இணைந்து இரண்டு படங்கள் உருவாக்கியுள்ளன. சல்மான் கானின் ‘டியூப்லைட்’ படத்திற்கும், சமீபத்தில் வெளிவந்த ஷாருக் கானின் ‘ஜப் ஹாரி மெட் சேகல்’ படத்திற்கும் இதுபோன்ற எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்திய அளவில் மூன்றாவது முறையாகவும், தென்னிந்திய அளவில் முதல்முறையாகவும் இந்த எமோஜி டெக்னாலஜியைப் பயன்படுத்தும் படமாக ‘மெர்சல்’ இடம்பிடித்திருக்கிறது.

#Vijay #AalaporaanThamizhan #Neethanae #Mersal #ShreyaGhoshal #ARRahman #Samantha #KajalAgarwal #Atlee #SriThenandalFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;