ஐரோப்பா, ‘குரோடியா’வில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்!

ஐரோப்பா நாட்டில் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ இறுதிகட்ட படப்பிடிப்பு!

செய்திகள் 18-Aug-2017 10:51 AM IST VRC கருத்துக்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் முக்கிய பாத்திரங்களில் நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஐரோப்பா – குரோடியா நாட்டுக்கு சென்றுள்ள படக்குழுவினர் அங்குள்ள இயற்கை எழிலான இடங்களில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட ஒரு டூயட் பாடலை படமாக்கி வருகிறார்கள். இந்த பாடல் காட்சியுடன் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து விடுமாம். ஏற்கெனவே விக்னேஷ் சிவன் எழுதி, அனிருத் இசையில் வெளியான ‘ நானா தானா…’ சிங்கிள் டிராக் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படம் மீதும், பாடல்களும் மீதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷுடன் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், செந்தில், தம்பி ராமையா முதலானோரும் நடிக்கிறார்கள்.

#Suriya #KeerthySuresh #ThaanaSerndhaKoottam #NaanaThaana #Anirudh #VigneshShivn #RamyaKrishnan #Karthik #RJBalaji #ThambiRamaiah #Senthil

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி² - மோஷன் போஸ்டர்


;