நடிகர் அல்வா வாசுவுக்கு நடிகர் சங்கம் நிதி உதவி!

கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நடிகர் அல்வா வாசுவின் குடும்பத்தினருக்கு நடிகர் சங்கம் நிதி உதவி!

செய்திகள் 17-Aug-2017 3:02 PM IST VRC கருத்துக்கள்

தமிழில் 900 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் அல்வா வாசு. இவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டு மதுரை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறிவிட்டார்கள். தற்போது ரொம்பவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அல்வா வாசுவின் குடும்பத்தினருக்கு உதவும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் 20,000 ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. இது தவிர நடிகர் சங்க பொது செயலாளரும், பொருளாளரும் தனிப்பட்ட முறையில் அவருக்கு நிதி உதவி வழங்க உள்ளனர். மேலும் அல்வா வாசுவின் குடும்பத்தினருக்கு பண உதவி செய்ய விரும்புவோர் வசதிக்காக அல்வா வாசுவின் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடிகர் சங்கம் செய்துள்ளது.

#NadigarSangam #AlwaVasu #Amaithipadai #Vishal #Naaser #Ponvannan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை ட்ரைலர்


;