அரவிந்த்சாமி, சந்தீப் நடிக்கும் ‘நரகாசூரன்’ படப்பிடிப்பு துவங்கியது!

‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தின் படப்பிடிப்பு துவக்கியது!

செய்திகள் 17-Aug-2017 10:34 AM IST VRC கருத்துக்கள்

‘துருவங்கள் பதினாறு’ வெற்றி படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் ‘நரகாசூரன்’. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. அரவிந்த்சாமி, ‘மாநகரம்’ புகழ் சந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா முதலானோர் நடிக்கிறார்கள். ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் போல் இந்த படமும் க்ரைம் த்ரில்லர் படமாம்! இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறவிருக்கிறது. நரகாசூரனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்திற்கு இசை அமைத்த ரான் யோஹான் இசை அமைக்கிறார்.

#Naragasooran #Arvindswamy #KarthikNarien #SundeepKishan #Maanagaram #Indrajith #Shriya #DhruvangalPathinaaru

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டிரைலர்


;