தீபாவளி ரேஸில் விஜய்யுடன் மோதும் அர்ஜுன், கௌதம் கார்த்திக்!

‘மெர்சலு’டன் களமிறங்கும் ‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும் ‘சொல்லிவிடவா’

செய்திகள் 16-Aug-2017 12:24 PM IST Chandru கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் 3 வித்தியாசமான வேடங்களில் நடித்திருப்பதாகக் கூறப்படும் ‘மெர்சல்’ படத்தின் ஆடியோ விழா வரும் 20ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்குக் கொண்டு வர தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்புவரை வேறெந்த படமும் தீபாவளி ரிலீஸில் மெர்சலுடன் போட்டியிடாத நிலையில், நேற்று இரண்டு படங்கள் தங்களின் ரிலீஸாக தீபாவளி பண்டிகையை அறிவித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்திருக்கும் ‘ஹர ஹர மஹாதேவகி’ படமும், அர்ஜுன் இயக்கத்தில் அவரின் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘சொல்லிவிடவா’ படமும் தீபாவளியன்று ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

#Mersal #Vijay #Atlee #SriThenandalFilms #StudioGreen #HaraHaraMahadevaki #GuathamKarthik #NikkiGalrani #Sollividava #AishwaryaArjun

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சீதக்காதி ட்ரைலர்


;