‘நெஞ்சில் துணிவிருந்தால்’ பட விழாவில் ‘கோவை 20 ரூபாய் டாக்டரு’க்கு மரியாதை செய்த சுசீந்திரன்!

கோவை ’20 ரூபாய் டாக்டரு’க்கு மரியாதை செய்த இயக்குனர் சுசீந்திரன்!

செய்திகள் 16-Aug-2017 12:02 PM IST VRC கருத்துக்கள்

‘அன்னை ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஆண்டனி தயாரித்து, சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவையில் 20 ரூபாய் மட்டும் கட்டணம் வாங்கி மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவை செய்து வந்து, சமீபத்தில் காலமான டாக்டர் பாலசுபிரமணியத்துக்கு மரியாதை செய்தார் இயக்குனர் சுசீந்திரன்! இது குறித்து சுசீந்திரன் தரப்பினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

‘‘இன்றைய காலத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே பாதி சொத்தை நம்மிடமிருந்து வாங்கிவிடுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. " மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் " என்போம்! அதை நிஜமாக்கி வாழ்ந்து காட்டியவர் ‘20 ருபாய் டாக்டர்’ என்று அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம். கோவை ராஜ கணபதி நகரை சேர்ந்த இவர் சிகிச்சை அளிக்க முதலில் வாங்கிய ஃபீஸ் வெறும் 2 ரூபாய் தான்! நாளடைவில் ரூபாயின் மதிப்பு குறைய, குறைய தனது ஃபீஸை உயர்த்தி உயர்த்தி 20 ரூபாய்க்கு கொண்டுவந்தார். கடைசியாக ஒரு வருடத்துக்கு முன் வரை சிகிச்சை அளிக்க இவர் வாங்கிய தொகை 20 ரூபாய் தான்.நாளடைவில் இவரது பெயரே மறைந்து போய் ‘ 20 ரூபாய் டாக்டர்’ என்று பெயர் வந்துவிட்டது. கடந்த வருடம் இவர் இறந்து போன விஷயம் அறிந்த கோவை மக்கள், ‘ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி’ என கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினர். அந்த அளவுக்கு மிக சிறந்த மனிதரான அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று அவரது மகள், மருமகன் , பேரன் ஆகியோரை ‘ நெஞ்சில் துணிவிருந்தால்’ விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது!

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் கதைக்கும் மருத்துவ துறைக்கும் சம்பந்தம் இருப்பதால் இயக்குநர் சுசீந்திரன் அந்த டாக்டருக்கு கௌரவம் செய்ய நினைத்து அதற்கான ஏற்பாடுகலை செய்துள்ளார்.

#NenjilThunivirundhal #Suseendiran #SundeepKishan #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடைக்குட்டி சிங்கம் ட்ரைலர்


;