நடிகர் சண்முகசுந்தரம் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்!

நற்பெயரும், புகழும் பெற்று விளங்கியவர் நடிகர் சண்முகசுந்தரம்! - நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!

செய்திகள் 16-Aug-2017 11:10 AM IST VRC கருத்துக்கள்

ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகர் சண்முகசுந்தரம் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79. இவர் பழம்பெரும் நடிகை சந்திரகாந்தாவின் தம்பி ஆவார். கும்பகோணம் பக்கத்திலுள்ள திருப்பாம்புரம் தான் இவரது சொந்த ஊர்! மைலாபூரில் வசித்து வந்த இவருக்கு நேற்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. இந்நிலையில் சண்முக சுந்தரம் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

‘‘திரு. சண்முகசுந்தரம் அவர்கள் 1963-ஆம் ஆண்டு ‘இரத்த திலகம்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கல்லூரியில் பயிலும் காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டு மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டு தன் கலை வாழ்க்கையை தொடங்கியவர். 1972-ஆம் ஆண்டு ‘வாழையடி வாழை’ படத்தில் நடித்து திரைப்பட நடிகராரானார். தொடர்ந்து இன்று வரை ‘கரகாட்டக்காரன்’, ‘கிழக்கு வாசல்’, ‘நம்ம ஊரு ராசா’, ‘நண்பன்’, ‘அச்சமின்றி’ உட்பட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து தனது இயல்பான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தான் இவர் நடித்து கடைசியாக வெளிவந்த ப்டம். மேலும் ‘அண்ணாமலை’, ‘ அரசியல்’, ‘செல்வி’ ‘வம்சம்’ ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். தனது கடினமாக உழைப்பாலும், திறமையாலும் நற்பெயரும், புகழும் பெற்று விளங்கியவர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள்! அவரது மறைவு நாடக மற்றும் திரை உலகிற்கும் நடிகர் சமூகத்திற்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, அவரது அத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்’’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#NadigarSangam #Shanmugasundaram #Vishal #Naaser #Karthi #Ponvannan #Karunas #GangaiAmaran #Chennai28II

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;