சுசீந்திரன், சந்தீப் கிஷன் படத்தின் புதிய தலைப்பு!

சுசீந்திரனின் ’அறம் செய்து பழகு’ ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது!

செய்திகள் 16-Aug-2017 10:21 AM IST RM கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், மெஹரீன், விக்ராந்த், சூரி, சாதிகா, அப்புக்குட்டி முதலானோர் நடித்து வந்த படம் ‘அறம் செய்து பழகு’. ‘அறம்’ என்ற பெயரில் நயன்தாரா நடிப்பில் ஒரு படம் உருவாகி வரும் நிலையில் சுசீந்திரன் ‘அறம் செய்து பழகு’ என்ற தனது படத்தின் தலைப்பை ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றி வைக்கப்பட்டுள்ளார். இந்த தலைப்பு அறிவிப்புக்காக நேற்று மாலை ஆடியோ வெளியிட்டு விழாவைப் போன்று ஒரு விழவை நடத்தி அதில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளர். லக்‌ஷமண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அன்னை ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஆண்டனி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

#Suseendiran #NenjilThunivirundhal #AramSeithuPazhagu #SundeepKishan #Aramm #Nayanthara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நரகாசூரன் - டீசர்


;