30 லட்சம் ரூபாய் செலவில் அரவிந்த்சாமி, நந்திதா பப் சாங்!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘வணங்காமுடி’யில் 30 லட்சம் ரூபாய் செலவில் பப் சாங்!

செய்திகள் 14-Aug-2017 2:01 PM IST VRC கருத்துக்கள்

செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன் மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘வணங்காமுடி’. ‘மேஜிக் பாக்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரித்து வரும் இந்த படத்தின் கதையில் முக்கியமான ஒரு இடத்தில் பப் சாங் ஒன்று இடம் பெறுகிறது. இந்த பப் சாங்கை பிரம்மாண்டமாக, கலர்ஃபுல்லாக படமாக்க படக்குழுவினர் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். இந்த பப் சாங்கை சென்னையிலுள்ள ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். அவரது இசையில் அமைந்துள்ள பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த பப் செட்டில் நந்திதா நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போது, அங்கே ஏதோ ஒரு முக்கிய விஷயத்தை அரவிந்தசாமி தேடிக்கொண்டிருப்பது போன்று காட்சிகளை படமாக்கியுள்ளனர். தலைவாசல், அமராவதி, கர்ணா, நான் அவனில்லை உட்பட பல படங்களை இயக்கிய செல்வா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிந்து விடுமாம். மேற்கண்ட தகவல்களை இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

#Vanagamudi #ArvindSwamy #Nandita #Selva #Pudhayal #RitikaSingh #Simran #MagicBoxProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;