சிவாஜி சிலை : தமிழக அரசிடம் மீண்டும் கோரிக்கை வைத்த நடிகர் சங்கம்!

சிவாஜி சிலை அகற்றம் – தமிழ அரசிடம் மீண்டும் கோரிக்கை வைத்த நடிகர் சங்கம்!

செய்திகள் 14-Aug-2017 10:40 AM IST VRC கருத்துக்கள்

சென்னை கடற்கரை சாலையில் நிறுவப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை சமீபத்தில் அகற்றப்பட்டு அந்த சிலையை இப்போது சென்னை அடையாறிலுள்ள மணிமண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜியின் சிலை மாற்றம் குறித்து நடிகர் சங்கம் சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன விவரம் வருமாறு:

‘‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க அரசு தீர்மானித்த வேளையில் அன்றையை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை 12-1-17 அன்று நேரில் சந்தித்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள், சிலையை பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலோ வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இந்நிலையில் 3.8.17 அன்று கடற்கரை சாலையில் இருந்து சிலை அகற்றப்பட்டு மணிமண்டப வளாகத்தில் தமிழக வைத்துள்ளது. இதுபற்றி நடிகர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலோ நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் திரு உருவ சிலையை நிறுவ வேண்டும் என்கிற வேண்டுகோளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இந்த தீர்மானத்தை தமிழக அரசிடம் வேண்டுகோளாக வைத்து கடிதம் கொடுப்பதென நடிகர் சங்கம் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சிலைக்காக சமூக அமைப்புகளும், திரைத்துறையை சார்ந்த ஃப்ஃபெசி, இயக்குனர் சங்கம் அனைத்தும் குரல் கொடுத்திருப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது’’ இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SivajiGanesan #NadigarSangam #NadigarThilagam #Naaser #Vishal #Karthi #Prabhu #VikramPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;