அஜித், சிவா கூட்டணியின் மூன்றாவது படமான ‘விவேகம்’ இம்மாதம் 24-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற நிலையில் இப்படம் குறித்த பல தகவலகளை வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர்! இந்த படத்தில் அஜித்தின் கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்க்வாட் அணியின் ஒரு அங்கமாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக். ‘விவேகம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அமிலா டெர்ஜிமெஹிக் இப்படி கூறுகிறார்.
‘விவேகம்’ போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால்பதிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரபல ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்த ‘தி நவம்பர் மேன்’ என்ற படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்து தான் இயக்குனர் சிவா எனக்கு இந்த பட வாய்ப்பினை அளித்தார் என்று அறிந்தேன். ஆக்ஷன் படங்களின் ரசிகையான எனக்கு இயக்குனர் சிவா கூறிய ‘விவேகம்’ கதையும், அதில் எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.
அஜித்குமாரை பார்ப்பதற்கு முன்பாகவே அவர் இந்திய சினிமாவில் பெரிய நட்சத்திரம் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் எந்த தலைக்கனமும் இல்லாமல் அவர் எளிமையாக பழகிய விதம் என்னை கவர்ந்தது. அவரது தொழில் பக்தி நான் இதுவரை எந்த நடிகரிடமும் பார்த்ததில்லை. இந்திய சினிமா ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தை நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாக சொல்லுவேன்’’ என்று கூறியுள்ளார்.
#Vivegam #Ajith #KajalAgarwal #Amilaterzimehic #AksharaHaasa #VivekOberai #Anirudh #Siva
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...