ஆந்திரா, தெலங்கானாவில் சாதனை புரிந்த ரஜினியின் ‘2.0’

ஆந்திரா, தெலங்கானாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ரஜினியின் ‘2.0’

செய்திகள் 10-Aug-2017 3:25 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ (எந்திரன்-2) வருகிற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ‘2.0’வின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வர, படத்தின் வியாபார விஷயங்களும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமை விற்பனையில் ‘2.0’ பெரும் சாதனை புரிந்திருப்பதாக இப்படத்தை தயாரிக்கும், ‘லைகா நிறுவன’த்தை சேர்ந்த ராஜு மகாலிங்கம் ட்வீட் செய்திருக்கிறார். அவர் ட்வீட் செய்திருப்பதில், ‘‘2.0’ ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுவிட்டன! லைகா நிறுவனம் மற்றும் குளோபல் சினிமாவின் கூட்டு, வரலாறு படைக்கவுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது இதுவரை வேறு எந்த ஒரு தமிழ் படமும் செய்திராத சாதனையை ரஜினியின் ‘2.0’ செய்திருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்! ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் என்று பெரும் கலைஞர்கள் இணைந்திருக்கும் இப்படம் 3-டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

#2PointO #Rajinikanth #LycaProduction #AmyJackson #AkshayKumar #Shankar #Endhiran #Superstar #RajuMahalingam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்க செல வீடியோ பாடல் - காலா


;