‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை பார்க்கத் தூண்டும் 6 விஷயங்கள்!

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை பார்க்கத் தூண்டும் 6 விஷயங்கள்!

முன்னோட்டம் 10-Aug-2017 2:55 PM IST Chandru கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தளபதி பிரபு இயக்கியுள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தைப் பார்க்கத் தூண்டும் காரணிகளில் 6 முக்கிய விஷயங்களை ‘டாப் 10 சினிமா’ எக்ஸ்க்ளூசிவாக இங்கே தொகுத்துள்ளது.

1. ஆரம்பப் படங்களில் காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது தனது கதாபாத்திரத்திலும், கதைத் தேர்விலும் நிறைய வெரைட்டிகளை முயற்சித்து வருகிறார். அந்தவகையில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் கணேஷ் என்ற கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார் உதய். வேஷ்டி, சட்டை, முறுக்கு மீசை, கலர் கலர் கண்ணாடி என தனது தோற்றத்தை மாற்றுவதிலும் இப்படத்திற்காக அவர் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்.

2. ஹீரேவாக நடித்து வந்த பார்த்திபன், மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிப்பதாக இருந்தால், அப்படத்தின் கதையையும், தன் கேரக்டருக்கான முக்கியத்துவத்தையும் முழுமையாகத் தெரிந்து கொண்ட பிறகே ஒப்புக்கொள்வார். அந்த வகையில், கொஞ்சம் வில்லத்தனமான ‘ஊத்துக்காட்டான்’ என்ற கேரக்டரில் இப்படத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். ஹீரோவுக்கும், பார்த்திபனுக்குமான மோதல்களும், வசனங்களும் நிச்சயமாக ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. கிராமத்துப் பின்னணியில் உருவாகும் படங்கள் என்றாலே இயக்குனர்களின் முதல் சாய்ஸ் டி.இமானாகத்தான் இருப்பார். அந்தவகையில், ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் ஆல்பத்திற்கும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, ‘சிங்கக்குட்டி நான்தான்டி...’ பாடல் ஏற்கெனவே வைரல் ஹிட்டாகியுள்ளது. காட்சிகளோடு படத்தில் பார்க்கும்போது இன்னும் பெரிய வரவேற்பைப் பெறும் இப்பாடல்.

4. கிராமத்துப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை, குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில்... காதல், சென்டிமென்ட், காமெடி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

5. ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் உதயநிதி ஸ்டாலினும், சூரியும் காமெடிக்காக கைகோர்த்திருக்கிறார்கள். ரூரல் சப்ஜெக்ட் என்றாலே, படத்தில் சூரியின் காமெடிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே, ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்க சூரி உத்திரவாதம் தருகிறார்.

6. தமிழ் பேசுற, தமிழ்நாட்டு ஹீரோயின்களை இன்றைய தேதியில் தமிழ்ப்படத்தில் பார்ப்பதே அறிதுதான். ‘அடியே அழகே...’ புகழ் நிவேதா பெத்துராஜ் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்திருப்பது அந்தவகையில் சிறப்பே. கிராமத்துக் கதையில் இந்த மதுரைப் பெண்ணின் பங்களிப்பு நிச்சயம் பலமாகவே அமைந்திருக்கும்.

#PodhuvaagaEmmanasuThangam #UdhayanidhiStalin #NivethaPethuraj #Parthiepan #Soori #DImman #ThalapathyPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;