‘மங்காத்தா’ அஜித், ‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி வரிசையில் ஷாம்!

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் ஸ்டைலிஷ் வில்லனாகும் ஷாம்!

செய்திகள் 10-Aug-2017 12:09 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவியுடன் ‘தில்லாலங்கடி’, அர்ஜுனுடன் ‘ஒரு ’மெல்லிய கோடு’ முதலான படங்களில் வில்லனாக களம் இறங்கிய ஷாம் இப்போது மற்றுமொரு படத்தில் வில்லனாக நடிக்கிறார். அந்த படம் வெங்கட் பிரபு இயக்கும் ‘பார்ட்டி’. ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், மிர்ச்சி சிவா, கயல் சந்திரன், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெதுராஜ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. பிரேம்ஜி அமரன் இசை அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஃபிஜியில் நடந்து வர, திடீரென்று இயக்குனர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் டி.சிவாவும் நடிகர் ஷாமை தொலைபேசியல் அழைத்து, ‘‘நாங்கள் இப்போது ஃபிஜியில் பார்ட்டியில் இருக்கிறோம்! நீங்களும் உடனே ‘பார்ட்டி’யில் கலந்துகொள்ள ஃபிஜிக்கு புறப்பட்டு வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தனராம். உடனே ஃபிஜிக்கு புறப்பட்டு சென்ற ஷாமுக்கு ‘பார்ட்டி’யில் ஸ்டைலிஷான் ஒரு கேங்ஸ்டர் கேரக்டரை கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள் வெங்கட் பிரபுவும், டி.சிவாவும்! ‘மங்காத்தா’வில் அஜித் ஏற்று நடித்த கேரக்டர், ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி ஏற்று நடித்த வில்லன் கேரக்டர் மாதிரி ’பார்ட்டி’யில் எனது கேரக்டர் வித்தியாசமாக இருக்கும் என்று ஷாம் கூறியுள்ளார்! ‘பார்ட்டி’ தவிர ஷாம் கதாநாயகனாக நடித்து வரும் ‘காவியன்’ தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் விரைவில் வெளியாகவிருக்கிறது.

#Shaam #Party #VenkatPrabhu #Mankatha #Ajith #ThaniOruvan #ArvindSwamy #JayamRavi #OruMelliyaKodu #Arjun

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;