‘சண்டக்கோழி-2’ படத்திற்காக பின்னி மில்லில் உருவாகும் மதுரை!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘சண்டைக்கோழி-2’ படத்திற்காக 6 கோடி செலவில் மதுரை செட்!

செய்திகள் 10-Aug-2017 11:45 AM IST VRC கருத்துக்கள்

‘சண்டைக்கோழி’யை தொடர்ந்து மீண்டும் ‘சண்டைக்கோழி-2’வில் இணைந்துள்ளனர் இயக்குனர் லிங்குசாமியும், விஷாலும். ‘சண்டைக்கோழி-2’ படத்தை விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இந்த படத்திற்காக சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் நில பரப்பில் மதுரை பின்னணியை கொண்ட செட் அமைக்கிறார்கள். 500 கடைகள், கோயில், திருவிழா கொண்டாட்டம் முதலான காட்சிகளை படமாக்குவதற்காக அமைக்கப்படும் இந்த பிரம்மாண்ட அரங்கத்துக்கான செலவு 6 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரங்கம் அமைப்பதற்கான பணிகளை துவங்கியுள்ள படக்குழுவினர் அதற்கு முன்னதாக இன்று காலை பூஜையும் போட்டுவிட்டது! இந்த பூஜையில் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யின் இணை தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ், இயக்குனர் லிங்குசாமி, கலை இயக்குனர் ராஜீவன் முதலானோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த படத்தில் விஷாலுடன் யார் யார் நடிக்கிறார்கள்? யாரெல்லாம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றவிருக்கிறார்கள் என்பது குறித்த எந்த அதிகார்பூர்வ தகவலையும் இப்படக்குழுவினர் வெளியிடவில்லை!

#Sandakozhi2 #Vishal #Lingusamy #ThirupathiBrothers #VishalFilmFactory #Vishal #MSMurugaraj #Rajeevan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;