அஜித், லிங்குசாமியை பார்த்து பதறிப்போன சூரி!

லிங்குசாமி இயக்கத்தில் அஜித்துடன் நடிக்கும்போது சூரிக்கு ஏற்பட்ட சுவாரஸ்ய சம்பவம்!

செய்திகள் 9-Aug-2017 3:41 PM IST VRC கருத்துக்கள்

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூரி! ஒரே சமயம் பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வரும் சூரி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நடிக்க வந்த புதிதில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்! லிங்குசாமி இயக்கத்தில் ‘ஜி’ படத்தில் அஜித்துடன் நடிக்கும்போது ஏற்பட்ட ஒரு சுவாரஸ்ய விஷயத்தை சூரி பகிர்ந்து கொள்ளும்போது,

‘‘லிங்குசாமி இயக்கிய ‘ஜி’ படத்தில் எனக்கு இரண்டே இரண்டு காட்சிகள் தான். கல்லூரி பின்னணியில் நடக்கும் ‘ஜி’யில் நான் அஜித்துக்கு எதிரான அணியை சேர்ந்தவனாக நடித்திருப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் லிங்கு சாமி சார் எனக்கு அஜித்தை திட்டி பேசுவது மாதிரியான ஒரு வசனத்தை கொடுத்தார். நான் அதை பேசி நடித்தபோது அவர் எழுதி கொடுத்ததை விட மேலும் சில வார்த்தைகளை சேர்த்து பேசிவிட்டேன். ஷாட் முடிந்ததும் லிங்குசாமி சார் என்னை அருகில் கூப்பிட்டு மானிட்டரை காண்பித்து, ‘நீ என்ன பேசனேன், சொல்லு’ என்றார்! என்னண்ணே என்றேன்! நீ என்ன பேசியிருக்கேன் பாரு’ என்றார்! எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. தப்பு பண்ணிவிட்டேன் என்ற பயத்தில் என் கை கால் எல்லாம் ஆட ஆரம்பித்தது. நம்ம கத இதோட முடிஞ்சு போச்சு என்று நினைத்து அங்கிருந்து அப்படியே ஓட்டம் பிடித்து விடாலாம்னு நினைச்சேன். அப்போது லிங்கு சாமி சார் பக்கத்தில் அஜித் சாரும் இருந்தார். மிரண்டு போன என்னை பார்த்து லிங்குசாமி சார் கட்டிப் பிடித்து, ‘சொல்லி கொடுத்ததை விட சிறப்பா திட்டி பேசியிருக்கிறாய், இப்படித்தான் இருக்கணும்! சூப்பர் என்றார்! அதன் பிறகு அஜித் சாரும் எனக்கு கை கொடுத்து சூப்பரா பண்ணியிருக்கீங்க என்று சொன்னார்! அப்போது தான் எனக்கு மூச்சே வந்தது’’ என்றார்!

#Soori #Kathanayagan #VishnuVishal #Ajith #Lingusamy #Ji #NicArts

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;