விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

‘வேலைக்காரன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனும், சிவகார்த்திகேயனும் கூட்டணி அமைக்கிறார்கள்

செய்திகள் 9-Aug-2017 3:22 PM IST Chandru கருத்துக்கள்

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வரும் இப்படம் ஆயுதபூஜை விடுமுறையில் ரிலீஸாகவிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவா. இந்தப் படம் முடிவடைந்ததும் ‘நானும் ரௌடிதான்’ புகழ் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ‘‘விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் கைப்பற்றி இருக்கிறோம்!’’ என சன் டிவியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்படம் முடிவடைந்ததும் சிவகார்த்திகேயன் படத்தை அவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால், இப்படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

#Sivakarthikeyan #VigneshShivn #Nayanthara #Ponram #ThaanaSerndhaKoottam #Anirudh #Velaikkaran #SunTV

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோலமாவு கோகிலா ட்ரைலர்


;