அஜித்தின் ஒவ்வொரு பட ரிலீஸிற்குப் பிறகும், அவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? யார் அப்படத்தை இயக்கப் போகிறார்? ஜோடி யாராக இருக்கும்? என ஒவ்வொரு ‘தல’ ரசிகரும் நகம் கடிக்க எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வழக்கமாக ஒரு படம் முடிந்து, அது ரிலீஸான பின்பே அஜித்தின் அடுத்தபட அறிவிப்பு வெளியாகும். ஆனால், இந்தமுறை, ‘விவேகம்’ ரிலீஸிற்கு முன்பே, அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாதான் இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 25 வருட திரையுலக பயணத்தை முன்னிட்டு, அவரின் ரசிகர்கள் மதுரையில் அஜித்திற்கு வெண்கல சிலை ஒன்றை நிறுவி திறப்பு விழா கொண்டாடினர். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் இமான் அண்ணாச்சி, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஜித், சிவா இணையும் 4வது படத்தில் தன்னை நடிக்கக் கேட்டிருப்பதாகக் கூறினாராம். ஆனால், இந்த செய்தி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குனர் சிவாவோ, அல்லது தயாரிப்பு நிறுவனமோ வெளியிடவில்லை. ஒருவேளை, ஆகஸ்ட் 24ம் தேதிக்குப் பிறகு, அதாவது ‘விவேகம்’ வெளியான பின்பு இந்த புதிய படம் குறித்த முறையான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
#Vivegam #ImmanAnnachi #AjithKumar #SiruthaiSiva #Veeram #Vedalam #Thala #SathyaJothiFilms
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ரஜினி ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக...
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...