வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினி?

‘காலா’வை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ரஜினி?

செய்திகள் 5-Aug-2017 3:13 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி! ‘காலா’வின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினி அடுத்து நடிக்க இருக்கும் படம் குறித்த தகவலும் வெளியாகியவண்ணம் உள்ளன! சமீபத்தில் ‘காலா’ படப்பிடிப்பு தளத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் வந்திருந்தார் என்றும் அவர் இரண்டு முறை ரஜனியிடம் ஒரு சில கதைகள் குறித்து விவாதித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக ‘காலா’ படத்திற்கு பிறகு ரஜினி தனது அடுத்த படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ முதலான படங்களை தொடர்ந்து தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கி வரும் ‘வட சென்னை’யில் நடித்து வருகிறார். அத்துடன் ‘காலா’ படத்தை தயாரித்தும் வருகிறார்! வெற்றிமாறன், தனுஷ் இணைந்துள்ள ‘வட சென்னை’ முடிந்ததும் ரஜினி, வெற்றிமாறன் இணையும் படத்தின் வேலைகள் ஆரம்பமாக அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

#Rajinikanth #Kabali #Kaala #Vetrimaaran #VadaChennai #Endhiran2 #Aadukalam #Superstar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;