இன்று மாலை ‘வேலைக்காரன்’ தரவிருக்கும் சர்ப்ரைஸ்”

இன்று மாலை ‘வேலைக்காரன்’ படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகவிருக்கிறது!

செய்திகள் 4-Aug-2017 11:03 AM IST Chandru கருத்துக்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பும் 30 சதவிகிதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படங்களை தயாரித்து வரும் ‘24AM STUDIOS’ நிறுவனம் இன்று மாலை 6 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இது, அநேகமாக ‘வேலைக்காரன்’ படம் குறித்த அறிவிப்பாகதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது! ஆயுத பூஜையை முன்னிட்டு செப்டம்பர் 29ஆம் தேதி வேலைக்காரன் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ஃபஹத் ஃபாசில், ஸ்னேகா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க அனிருத் இசை அமைக்கிறார்.

#Sivakarthikeyan #Nayantara #Velaikkaran #Ponram #24AMStudios #MohanRaja #RDRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;