‘விக்ரம் வேதா’ இயக்குனர்களின் அடுத்த படம்?

‘விக்ரம் வேதா’ வெற்றியைத் தொடர்ந்து புஷ்கர் - காயத்ரியின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த படம் எது?

செய்திகள் 3-Aug-2017 10:43 AM IST Chandru கருத்துக்கள்

‘ஓரம் போ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் - காயத்ரி. தம்பதி இயக்குனர்களான இவர்களின் அடுத்த படமாக சிவா நடிப்பில் ‘வ’ (குவார்ட்டர் கட்டிங்) திரைப்படம் அமைந்தது. இரண்டு படங்களுக்குமே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தபோதும், மனம் தளராமல் 7 வருட போராட்டங்களுக்குப் பிறகு ‘விக்ரம் வேதா’ திரைக்கதையை உருவாக்கி அதில் விஜய்சேதுபதி, மாதவனை நடிக்க வைத்தார்கள். படம் வெளிவந்து தற்போது வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கிறது. திரைக்கதை, இயக்கும், பெர்ஃபார்மென்ஸ், டெக்னிக்கல் விஷயங்கள் என அனைத்து துறைகளிலும் ‘விக்ரம் வேதா’ பாராட்டுக்களை குவித்து வருகின்றது.

இதனால் ‘விக்ரம் வேதா’வைத் தொடர்ந்து புஷ்கர் - காயத்ரி அடுத்து எந்த படத்தை இயக்குவார்கள்? அதில் யார் ஹீரோவாக நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்துள்ள பேட்டி ஒன்றில், ‘‘விக்ரம் வேதா படத்தைத் தயாரித்த ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சசிகாந்த் மீண்டும் ஒரு படத்தை இயக்கச் சொல்லி கேட்டிருக்கிறார். எங்களிடமும் இரண்டு கதைக்கான ஐடியாக்கள் உள்ளன. இப்போதைக்கு பேச்சுவார்த்தையில் மட்டுமே இருக்கும் இந்த படம் குறித்து விரைவில் அறிவிக்கிறோம்!’’ என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

#PushkarGayathri #VikramVedha #OramPo #YNotStudios #Madhavan #VijaySethupathi #Kathir #Sashikanth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர் 2


;