பாகுபலி, தேவசேனா, விக்டர் கூட்டணியில் ‘சாஹோ’

பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் அருண் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது

செய்திகள் 2-Aug-2017 11:07 AM IST Chandru கருத்துக்கள்

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் கிடைத்த விக்டர் கதாபாத்திரம் அருண் விஜய் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவர் சமீபத்தில் ஹீரோவாக நடித்த ‘குற்றம் 23’ படமும் வெற்றிபெற்றதால் தற்போது ‘தடம்’ படத்தில் உற்சாகமாக நடித்து வருகிறார். ‘குற்றம் 23’ வெளிவருவதற்கு முன்பு, ‘புரூஸ் லீ’ தெலுங்கு படத்திலும், ‘சக்ரவியூகா’ கன்னட படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இப்போது மீண்டுமொரு தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அருண் விஜய்யை நாடியிருக்கிறது. அதுவும் ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸுடன் நடிக்கும் அற்புதமான வாய்ப்பு. ‘பாகுபலி’யைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ என்ற தெலுங்கு படத்தில் அருண் விஜய் நடிக்கிறார் என சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணமிருந்தன. இப்போது அந்த செய்தி உண்மையாகியுள்ளது. ‘சாஹோ’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

#YennaiArindhaal #ArunVijay #RamCharanTeja #Prabhas #AnushkaShetty #Saaho #Baahubali #SSRajamouli

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் ட்ரைலர்


;