படப்பிடிப்புகள் வழக்கம்போல் நடைபெறும்! - தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

படப்பிடிப்புகள் வழக்கம்போல் நடைபெறும்! - தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

செய்திகள் 1-Aug-2017 11:12 AM IST VRC கருத்துக்கள்

ஃபெஃப்சி தொழிலாளர்கள் இன்று முதல் சினிமா வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ் பேசும்போது,

‘‘ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். அவர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல! ஃபெஃப்சியுடன் இணைந்து நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று சொல்லவில்லை. அவர்களுடனும் வேலை செய்வோம் என்று தான் கூறினோம். யாருடன் வேலை செய்வது, எத்தனை பேரை வேலைக்கு அமர்த்துவது என்பது தயாரிப்பாளர்களின் உரிமை! தமிழ் திரைப்படங்களில் பணியாற்ற மாட்டோம் என்று அறிவித்துள்ள ஃபெஃப்சி தொழிலாளர்கள் டெலிவிஷன் தொடர்கள், விளம்பர படங்கள், டாகுமெண்டரி படங்கள் போன்றவற்றில் வேலை பார்ப்பார்களாம். அவர்கள் மற்றவர்களுடன் வேலை பார்ப்பதுபோல் எங்களுக்கும் வேறு ஆட்களை வைத்து வேலை செய்ய உரிமை இருக்கிறது.

ஃபெஃப்சி தொழிலாளர்களின் சம்பளத்தை நாங்கள் குறைக்கவில்லை. முக்கால் மணிநேரத்திற்கு கூட முழுநாள் பேட்டா வேண்டும் என்பதும், இரயிலில் தூங்கிகொண்டு செல்வதற்கு பேட்டா வேண்டும் என்று கேட்பதும் சரி இல்லை என்றுதான் சொல்கிறோம். சினிமா இப்போது ஜி.எஸ்.டி.வரி, அதிக டிக்கெட் விலை போன்ற பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கிற நிலையில் யாருக்கோ சம்பளம் கொடுத்து படத்தை எடுக்க முடியாது.நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப 10 நடிகர்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்குகிறார்கள். மீதி 90 சதவிகிதம் சிறு படங்கள் தான்!

ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பால் சினிமா படப்பிடிப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஒளிப்பதிவாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் வேலைக்கு வருவதாக அறிவித்துள்ளது. எனவே திட்டமிட்டபடி அனைத்து படப்பிடிப்புகளும் வழக்கம் போல நடக்கும்’’ என்றார் பிரகாஷ்ராஜ்!

இந்த சந்திப்பில் பிரகாஷ்ராஜுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொது செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், கேயார், முரளிதரன், எஸ்.வி.சேகர், கே.ராஜன், அன்பாலயா பிரபாகரன், ஜாக்குவார் தங்கம் உளிட்ட பலர் இருந்தனர்.

#FEFSI #ProducersCouncil #RKSelvamani #Vishal #FEFSIUnion #SRPrabhu #Gauthammenon

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;