சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ லேட்டஸ்ட் தகவல்கள்!

ஆகஸ்ட் 14-ல் வெளியாகிறது சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ பாடல்கள்!

செய்திகள் 29-Jul-2017 12:35 PM IST VRC கருத்துக்கள்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தவிர மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி, விடிவி கணேஷ் தயாரிப்பில் ‘சக்க போடு போடு ராஜா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தை ‘லொள்ளு சபா’ புகழ் சேதுராமன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சிம்பு இசை அமைக்கிறார். இந்த படத்திற்காக சிம்பு இசையில் அனிருத், யுவன் சங்கர் ராஜா, டி.ரஜேந்தர், உஷா ராஜேந்தர், உன்னி கிருஷ்ண்ன் மகன் வாசுதேவ் முதலானோர் பாடல்களை பாடியுள்ளனர். இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்ட்மிட்டுள்ளனர்!

இந்த படத்தில் கதாநாயகியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். சர்வர் சுந்தரம் படத்திலும் இவர் தான் கதாநாயகி! சந்தான, வைபவி சாண்டில்யாவுடன் ரோபோ சங்கர், விடிவி கணேஷ், சம்பத் ஆகியோரும் ‘சக்க போடு போடு ராஜா’வில் நடிக்கிறார்கள்.

#Santhanam #SakkaPoduPoduRaja #Silambarasan #STR #ServerSundaram #OodiOodiUzhaikanum #MannavanVanthanadi #VTVGanesh #Selvaraghavan #VaibhaviShandilya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;