ஹாலிவுட் நடிகர்களுக்கு நிகரானவர் ஃபஹத் ஃபாசில்! - சிவகார்த்திகேயன் பாராட்டு!

‘வேலைக்காரன்’ படத்தில் ஃபஹத் ஃபாசில் நடிப்பை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

செய்திகள் 29-Jul-2017 10:50 AM IST VRC கருத்துக்கள்

மோகன் ராஜா இயக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ஒரு நெகட்டீவ் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் ஃபஹத் ஃபாசிலுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு ரசிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்ட கேள்விக்கு அவர் ட்விட்டர் பக்கத்தில் இப்படி பதிலளித்துள்ளார்! ‘எந்தவொரு ஹாலிவுட் நடிகருடனும் நடிப்பில் போட்டிப் போட தகுதியானவர் ஃபஹத் ஃபாசில்! அவருடன் இணைந்து நடிக்க முடிந்தது எனக்கு கிடைத்த பெரிய கௌரவமாக நினைக்கிறேன்’’ என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஃபஹத் ஃபாசில் அடுத்து ‘ஆரண்யகாண்டம்’ பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.


#Velaikaran #SivaKarthikeyan #SK #FahadhFaasil #MohanRaja #AaranyaKaandam #Nayantara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;