மம்முட்டியுடன் இணையும் பூனம் பாஜ்வா, வரலட்சுமி!

’மாஸ்டர் பீஸ்’ படத்தில் மீண்டும் மம்முட்டியுடன் இணையும் பூனம் பாஜவா, வரலட்சுமி!

செய்திகள் 29-Jul-2017 10:41 AM IST Top 10 கருத்துக்கள்

மலையாளத்தில் வெளியாகி 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த ’புலிமுருகன்’ படத்தின் கதாசிரியர் உதயகிருஷ்ணா! இவரது கதை திரைக்கதையில் அடுத்து உருவாகும் படம் ‘மாஸ்டர் பீஸ். இதில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கிறார். மம்முட்டி நடித்த ‘ராஜாதிராஜா’ என்ற படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் இயக்கும் இந்த படத்தில் மம்முட்டி காலேஜ் புரொஃபசராக நடிக்கிறார். மம்முட்டியுடன் பவானி துர்கா என்ற ஐ.பி.எஸ்.அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். பூனம் பாஜ்வா இன்னொரு காலேஜ் புரொஃபசராக நடிக்கிறார். அடிக்கடி பிரச்சனைகள் உருவாக கூடிய ஒரு கல்லூரி, அந்த கல்லூரிக்கு வரும் புதிய புரொஃபசர் மம்முட்டி, அவர் எப்படி அந்த கல்லூரியில் பிரச்சனைகளை உருவாக்கும் மாணவர்கள் கையாள்கிறார் என்பதுதானாம் இப்படத்தின் கதைக்களம். ஏற்கெனவே ’கஸப’ என்ற படத்தில் மம்முட்டியுடன் நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். அதைப்போல பூனம் பாஜ்வாவும் மம்முட்டியுடன் ‘வெனீசிலே வியாபாரி’, ‘சிக்காரி’ முதலான படங்களில் நடித்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்த மலையாள படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.


#Masterpiece #Mammootty #Varalaxmi #PoonamBajwa #PuliMurugan #RajathiRaja #VaralaxmiSarathkumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;