துல்கர் சல்மானின் ‘சோலோ’வில் 4 கதை, 11 இசை அமைப்பாளர்கள், 15 பாடல்கள்!

துல்கர் சல்மான் நடிப்பில் ‘டேவிட்’ பட இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கியிருக்கும் படம் ‘சோலோ’

செய்திகள் 28-Jul-2017 5:49 PM IST VRC கருத்துக்கள்

தமிழில் ‘டேவிட்’, ஹிந்தியில் ’ஷைத்தான்’, அமிதாப்பச்சன் நடித்த ‘வாசிர்’ முலான படங்களை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘சோலோ’. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தனித் தனியாக உருவாகி வருகிறது. இதில் துல்கர் சல்மான் ‘சோலோ’ ஹீரோவாக நடிக்க, 4 கதைகள், 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசை அமைப்பாளர்கள், 15 பாடல்கள் என்று இப்படம் உருவாகி வருகிறது.
அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று முன் சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இயக்குனர்கள் மணிரத்னம், ராஜீவ் மேனன், ‘சோலோ’வின் இயக்குனர் பிஜாய் நம்பியார், கதாநாயகன் துல்கர் சல்மான் முதலானோர் கலந்துகொண்டனர். அப்போது துல்கர் சல்மான் பேசும்போது ‘இது தமிழில் எனது மூன்றாவது படம்! ‘சோலோ’ ஒரு மிதாலஜிக்கல் படமாக உருவாகியுள்ளது. 4 கதைகளை கொண்டு ‘சோலோ’ ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது என்றாலும் பல படங்களில் நடித்த ஒரு அனுபவத்தை இப்படம் தந்தது’’ என்றார்.
இன்று துல்கர் சல்மான் பிறந்த நாள் என்பதால் படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழ் ‘சோலோ’வை ‘The Refex group'ஐ சேரந்த 'Refex Entertainment' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் சினிமா தயாரிப்பு இதுதானாம். வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவிருக்கும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது!


#DulquerSalmaan #DeeptiSati #SaiDhanshika #ArthiVenkatesh #NehaSharma #SruthiHariharan #BejoyNambiar #David #Vikram #Jiiva #ChiyanVikram #Sketch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;