’பிஸ்தா’வாகும் மெட்ரோ சிரிஷ்!

’மெட்ரோ’ சிரிஷ் நடிக்கும் படத்திற்கு கார்த்திக் படத் தலைப்பு!

செய்திகள் 28-Jul-2017 10:58 AM IST VRC கருத்துக்கள்

’மெட்ரோ’ படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பரவலாக பேசப்பட்டவர் சிரிஷ்! இவர் தற்போது ‘ஜாக்சன் துரை’ படத்தை இயக்கிய தரணீதரன் இயக்கத்தில் ‘ராஜா ரங்குஸ்கி’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சிரிஷ் நடிக்கும் படத்திற்கு ‘பிஸ்தா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1997-ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கார்த்திக், நக்மா நடித்து வெளியான படம் ‘பிஸ்தா’. இப்போது அந்த பட தலைப்பு சிரிஷ் நடிக்கும் படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. ‘மெட்ரொ’ படத்தில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்த ரமேஷ் பாரதி இந்த படத்தை இயக்குகிறார். கிராமத்து பின்னணியில் நடக்கும் காமெடி கதையாம் இப்படம். இந்த படத்தில் சிரிஷுக்கு ஜோடியாக மலையாளத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் ‘அயாள் ஞானல்ல’ என்ற படத்தில் நடித்த மிருதுலா முரளி நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக ‘சைத்தான்’ படப்புகழ் அருந்ததி நாயர் நடிக்கிறார். இவர்களூடன் யோகி பாபு, சென்ட்ராயன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தரண் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் கும்பகோணம், காரைக்குடி ஆகிய பகுதிக்ளில் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

#MetroShirish #RajaRanguski #Pistha #Karthik #Nagma #RameshBharathi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;